தெற்கு உள் கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் வரையிலான பகுதிகளில், தமிழகத்தின் வழியாக சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதன்படி, நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மின்னல் மற்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.