5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
15 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 15 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தெற்கு உள் கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் வரையிலான பகுதிகளில், தமிழகத்தின் வழியாக சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மின்னல் மற்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.