35-வது பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது 35-வது பிறந்தநாளை நேற்று உற்சாகமாக கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அறிமுகமான ஹன்சிகா, 2007 முதல் 2019-ம் ஆண்டு வரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர் வட்டத்தையும் உருவாக்கினார்.தற்போது திரைப்பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து தனது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.ஹன்சிகா கடந்த 2022-ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கத்தூரியாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் மாதம் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஹன்சிகா, புதிய படங்களுக்கான கதைகளையும் கேட்டு வருகிறார்.இந்நிலையில், தனது 35-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய ஹன்சிகாவுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்தனர்.பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஹன்சிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கேக் மற்றும் அழகிய அலங்காரங்களுக்கு மத்தியில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, இணையத்தில் வைரலாகி வருகின்றன.