Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 14 செப்டம்பர் 2026 | 29 ஆவணி பராபவ வருடம்

19 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

19 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நிலவும் வானிலை சூழல் காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு விதர்பா பகுதியில் காணப்படும் வளிமண்டல சுழற்சியில் இருந்து மன்னார் வளைகுடா வரை மராத்வாடா, வடக்கு உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகப் பகுதிகள் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் இன்று மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement
இந்நிலையில், தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, கடலூர், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு