Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

126 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிய முதல்-அமைச்சர் விஜய்

126 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிய முதல்-அமைச்சர் விஜய்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பதவிகளுக்கும் தேர்வு செய்யப்பட்ட 126 பேருக்கு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (29.07.2026) மனித வள மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 78 பேருக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 48 பேருக்கும் முதல்-அமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.தொகுதி-I பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட 78 பேரில், 28 பேர் துணை ஆட்சியர் பணிக்கும், 7 பேர் துணைக் காவல் கண்காணிப்பாளர் பணிக்கும், 19 பேர் உதவி ஆணையர் (வணிக வரி) பணிக்கும், 15 பேர் உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி) பணிக்கும், 3 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணிக்கும், 6 பேர் உதவி ஆணையர் (தொழிலாளர்) பணிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதில், தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையர் (தொழிலாளர்) பதவி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-I பணிகளில் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு மூலம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பணியாற்ற 40 உதவி பொறியாளர்கள், 6 சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மற்றும் 2 நூலகர்கள் தரம்-II என மொத்தம் 48 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட 126 பேருக்கும் முதல்-அமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கி, அவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் த.

Advertisement
சரத்குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் வே.க. ராஜீவ், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, மனித வள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சி. சமயமூர்த்தி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் அனுராக் மிஷ்ரா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு