Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 13 செப்டம்பர் 2026 | 28 ஆவணி பராபவ வருடம்

விழுப்புரம்: வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை திருட்டு

விழுப்புரம்: வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை திருட்டு

விழுப்புரம்: செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி செல்வி (45). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் எழுந்தபோது, தனது கழுத்தில் அணிந்திருந்த 3.25 பவுன் தாலி சங்கிலி காணாமல் போனதை பார்த்து செல்வி அதிர்ச்சி அடைந்தார். அதன் மதிப்பு ரூ.4 லட்சம் என கூறப்படுகிறது.

Advertisement
செல்வி வீட்டிற்கு வெளியே தூங்கியதை நோட்டமிட்ட மர்மநபர், அவர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செல்வி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை திருடிச் சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு