விழுப்புரம்: வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை திருட்டு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

13 Sep 2026 www.thinathulir.com

விழுப்புரம்: வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை திருட்டு

விழுப்புரம்: வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை திருட்டு

விழுப்புரம்: செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி செல்வி (45). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் எழுந்தபோது, தனது கழுத்தில் அணிந்திருந்த 3.25 பவுன் தாலி சங்கிலி காணாமல் போனதை பார்த்து செல்வி அதிர்ச்சி அடைந்தார். அதன் மதிப்பு ரூ.4 லட்சம் என கூறப்படுகிறது. செல்வி வீட்டிற்கு வெளியே தூங்கியதை நோட்டமிட்ட மர்மநபர், அவர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செல்வி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை திருடிச் சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.