Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 02 அக்டோபர் 2026 | 16 புரட்டாசி பராபவ வருடம்

விற்க முயன்ற 2 யானை தந்தங்கள் பறிமுதல்... குடியாத்தத்தில் 3 பேர் கைது!

விற்க முயன்ற 2 யானை தந்தங்கள் பறிமுதல்... குடியாத்தத்தில் 3 பேர் கைது!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றதாக 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 அடி நீளமுள்ள 2 யானை தந்தங்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. குடியாத்தம் பகுதியில் சிலர் இடைத்தரகர்கள் மூலம் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின்பேரில், குடியாத்தம் வனச்சரக அலுவலர் பிரதீப்குமார் தலைமையில் வனவர்கள் குமரேசன், சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன், ஜெகஜோதி உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு செதுக்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக வந்த 3 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் சுமார் 2 அடி நீளமுள்ள 2 யானை தந்தங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதனின் மகன் திருவேங்கடம் (38), அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த பாக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர்களான முனுசாமி (49), ஆட்டோ ஓட்டுநர் கோவிந்தராஜ் (37) ஆகியோர் என்பது தெரியவந்தது.

Advertisement
இதையடுத்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்து, யானை தந்தங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். வனத்துறை விசாரணையில், கைது செய்யப்பட்ட 3 பேரும் உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இவர்கள் திருப்பதிக்கு சென்றுள்ளனர். அப்போது திருமலையில் உள்ள பாபநாசம் அணை பகுதிக்கு சென்றபோது, ஆண் யானை ஒன்று இறந்து அழுகிய நிலையில் கிடந்ததாகவும், அதன் தந்தத்தை கையால் இழுத்தபோது வெளியே வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த தந்தங்களை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்து மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் ஆட்டோ ஓட்டுநரான கோவிந்தராஜ், காட்பாடி பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவரிடம் யானை தந்தங்களை விற்றுத் தருமாறு கூறியுள்ளார். இதையடுத்து குடியாத்தம் செதுக்கரை பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் தந்தங்களை வாங்கிக் கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி 3 பேரும் யானை தந்தங்களை எடுத்துக்கொண்டு செதுக்கரை பகுதிக்கு வந்தபோது வனத்துறையினரிடம் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,775
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு