Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிரியங்கா காந்தி

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிரியங்கா காந்தி

கேரளத்தின் வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடந்த 7-ஆம் தேதி வயநாடு மாவட்டத்தின் கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த விபத்தில் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர்.இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்.பி.யும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரியங்கா காந்தி இன்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கன்னூருக்கு வந்த அவர், அங்கிருந்து சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை பார்வையிட்டார்.தொடர்ந்து, நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்த பிரியங்கா காந்தி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து அவர்களின் துயரத்தில் பங்கேற்றார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு