வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிரியங்கா காந்தி
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

25 Jul 2026 www.thinathulir.com

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிரியங்கா காந்தி

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிரியங்கா காந்தி

கேரளத்தின் வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடந்த 7-ஆம் தேதி வயநாடு மாவட்டத்தின் கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த விபத்தில் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர்.இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்.பி.யும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரியங்கா காந்தி இன்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கன்னூருக்கு வந்த அவர், அங்கிருந்து சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை பார்வையிட்டார்.தொடர்ந்து, நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்த பிரியங்கா காந்தி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து அவர்களின் துயரத்தில் பங்கேற்றார்.