ரூ.1 லட்சத்திற்கு பச்சிளம் பெண் குழந்தை விற்பனை: திருப்பத்தூரில் 4 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பச்சிளம் பெண் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆம்பூரைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா - ஹவாமா தம்பதியருக்கு கடந்த 14-ம் தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே அவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அவர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிறந்த குழந்தையை விற்பனை செய்ய அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.இதுகுறித்த தகவலை அறிந்த பெங்களூருவைச் சேர்ந்த செய்யது - சம்ரின் தாஜ் தம்பதியினர் திருப்பத்தூர் வந்துள்ளனர். திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத நிலையில், அவர்கள் ரஹ்மத்துல்லா - ஹவாமா தம்பதியரிடம் இருந்து அந்த பச்சிளம் குழந்தையை ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.இந்த விவகாரம் தொடர்பாக ஆம்பூர் அருகே உள்ள உமராபாத் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.