Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 02 அக்டோபர் 2026 | 16 புரட்டாசி பராபவ வருடம்

ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா? - மு.க.ஸ்டாலின் கேள்வி

ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா? - மு.க.ஸ்டாலின் கேள்வி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: எம்.எல்.ஏ.க்களை ஷாப்பிங் செய்வதில் தீவிரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைப் பொருட்களைக்கூட வாங்க முடியாமல் சிரமப்படுவது தெரியுமா என கேள்வி எழுப்பியுள்ளார். தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டறிந்ததாகவும், நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்த விலைகளுடன் ஒப்பிடும்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அன்றாட சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கே குடும்பங்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், “ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி சரிவைச் சந்தித்த காலகட்டத்திலும், திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
ஆனால் தற்போது, நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வருவாய் அதிகரித்துள்ள நிலையிலும், தமிழ்நாடு கடந்த மூன்று மாதங்களாக சரிவைச் சந்தித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான Guidance TN-ல் பணியாற்றிய அனுபவமிக்க வல்லுநர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்வதாக செய்திகள் வெளியாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பொருளாதாரம், விலைவாசி, மின்சாரம், தொழில்துறை, சட்டம்-ஒழுங்கு, மருத்துவம், பால்வளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதில் கவனம் செலுத்தாமல், அனைத்து விஷயங்களிலும் ‘வெற்றி’ என்ற பெயரில் விளம்பரம் செய்வதிலேயே அரசு கவனம் செலுத்துவதாகவும், இதனால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,775
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு