Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 29 அக்டோபர் 2026 | 12 ஐப்பசி பராபவ வருடம்

ரஞ்சி கோப்பையில் ரவி சாஸ்திரியின் சாதனையை சமன் செய்த முஷீர் கான்

ரஞ்சி கோப்பையில் ரவி சாஸ்திரியின் சாதனையை சமன் செய்த முஷீர் கான்

ரஞ்சி கோப்பை 2026-27 கிரிக்கெட் தொடரில், மும்பை அணியின் இளம் ஆல்ரவுண்டர் முஷீர் கான் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி, முன்னாள் இந்திய கேப்டன் ரவி சாஸ்திரியின் சாதனையைச் சமன் செய்துள்ளார். அரியானா அணிக்கு எதிரான இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய முஷீர் கான், 185 பந்துகளைச் சந்தித்து 109 ரன்கள் குவித்தார். அவரது சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 430 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த அரியானா அணிக்கு எதிராக இடதுகை சுழற்பந்து வீச்சில் மிரட்டிய முஷீர் கான், 85 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அரியானா அணி 270 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் மும்பை அணி 160 ரன்கள் முன்னிலை பெற்றதுடன், அரியானா அணியை இரண்டாவது இன்னிங்ஸிலும் பேட்டிங் செய்ய அழைத்தது. ஒரே போட்டியில் சதம், 6 விக்கெட்டுகள்! ஒரே முதல் தர கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்து, குறைந்தது 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மும்பை வீரர்கள் பட்டியலில் முஷீர் கான் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Advertisement
இதற்கு முன்பு மதன் ரைஜி, தத்து பட்கர், வினூ மங்கட், பாலி உம்ரிகர் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். குறிப்பாக, 1990-91 ரஞ்சி கோப்பைத் தொடரில் ரவி சாஸ்திரி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார். தற்போது சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு முஷீர் கான் அதே சாதனையைப் படைத்திருப்பது மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானின் இளைய சகோதரரான முஷீர் கான், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி அணிக்கு வலுசேர்த்து வருகிறார். அரியானா அணிக்கு எதிரான போட்டியில் அவரது ஆல்ரவுண்ட் ஆட்டம் மும்பை அணிக்கு முக்கியப் பங்களிப்பாக அமைந்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு