Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

’மொக்கை ஜோக்கில் விழுந்தேன்’: கணவருடனான முதல் சந்திப்பை நினைவுகூர்ந்த நடிகை

’மொக்கை ஜோக்கில் விழுந்தேன்’: கணவருடனான முதல் சந்திப்பை நினைவுகூர்ந்த நடிகை

ஹாலிவுட் நடிகை எலிசபெத் ஓல்சன், தனது கணவரும் இசைக்கலைஞருமான ராபி ஆர்னெட்டை முதன்முறையாக சந்தித்தது குறித்துப் பேசிய பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. ராபி ஆர்னெட்டை தனது நெருங்கிய தோழி மூலமாகவே முதலில் சந்தித்ததாக எலிசபெத் ஓல்சன் தெரிவித்துள்ளார். இருவரும் முதன்முதலில் சந்தித்த சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், அப்போது நடந்த சுவாரசியமான நிகழ்வையும் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது: தனது நெருங்கிய தோழி ராபி ஆர்னெட்டின் இசைக்குழுவில் இருந்ததாகவும், அந்தத் தோழி மூலமாக அவரை சந்தித்ததாகவும் தெரிவித்தார். அனைவரும் ஒன்றாக விமானத்தில் பயணம் செய்தபோது, ராபி ஆர்னெட் ஒரு நகைச்சுவையான கருத்தை கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார். அப்போது ராபி முழுவதும் வெள்ளை நிற ஆடையில் இருந்துள்ளார். எலிசபெத் மற்றும் அவரது நண்பர் சார்லி ஆகியோர் அவரைக் கடந்து சென்றபோது, “நான் முழுவதும் வெள்ளை நிறத்தில் இருப்பதால் அவர்கள் என்னைப் பார்க்க முடிகிறதா?” என ராபி கேட்டதாக எலிசபெத் தெரிவித்துள்ளார்.

Advertisement
தான் ஒரு பேய் போல இருப்பதாகக் கருதி அவர் அந்த நகைச்சுவையை கூறியதாகவும், அது பெரிய அளவில் ரசிக்கக்கூடிய ஜோக் இல்லை என்றாலும், ராபியிடம் ஏதோ ஒரு தனித்துவமான விஷயம் இருப்பதை அப்போது உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ராபி ஆர்னெட்டின் குணநலன்களையும் எலிசபெத் ஓல்சன் பாராட்டியுள்ளார். அவர் அன்பானவர் என்றும், மற்றவர்களுடன் எளிதில் பழகக்கூடியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மற்றவர்கள் பேசுவதை கவனமாகக் கேட்பதுடன், தான் சந்திக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் அறிந்துகொள்வதில் ராபி அதிக ஆர்வம் கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்க இசைக்கலைஞரும் எழுத்தாளருமான ராபி ஆர்னெட் மற்றும் எலிசபெத் ஓல்சன் ஆகியோர் 2019-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இதையடுத்து, 2020-ம் ஆண்டு இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தை பிரமாண்டமாக நடத்தாமல், எளிமையான முறையில் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு