Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 31 அக்டோபர் 2026 | 14 ஐப்பசி பராபவ வருடம்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் முத்தரப்புத் தொடர் பாகிஸ்தானில் கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து, இரு அணிகளும் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement
லாகூரில் நடைபெறும் இந்த ஆட்டம் மதியம் 1.30 மணிக்குத் தொடங்குகிறது. இந்நிலையில், போட்டிக்கான டாஸ் போடப்பட்டதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் ஷாஹீன் ஷா அப்ரிடி முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனால் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு