Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 31 அக்டோபர் 2026 | 14 ஐப்பசி பராபவ வருடம்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் விஜய் அறிவிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் விஜய் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம், புதூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தந்தை, மகனின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதித்யன் (21), அவரது தந்தை ராஜா (49) ஆகிய இருவரும் கடந்த 5.10.2026 அன்று விவசாயக் கூலி வேலைக்காக நஞ்சை நிலத்தில் டிராக்டர் மூலம் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் உயர் அழுத்த மின்பாதை மின்கம்பத்தில் மோதியுள்ளது. இதனால் மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி டிராக்டர் மீது விழுந்து, அதை ஓட்டிச் சென்ற ஆதித்யன் மீது மின்சாரம் பாய்ந்தது.

Advertisement
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் வேலை செய்துகொண்டிருந்த அவரது தந்தை ராஜா, மகனைக் காப்பாற்ற முயன்றபோது அவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தந்தை, மகன் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களுக்கும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு