முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
31 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 31 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் முத்தரப்புத் தொடர் பாகிஸ்தானில் கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து, இரு அணிகளும் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. லாகூரில் நடைபெறும் இந்த ஆட்டம் மதியம் 1.30 மணிக்குத் தொடங்குகிறது. இந்நிலையில், போட்டிக்கான டாஸ் போடப்பட்டதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் ஷாஹீன் ஷா அப்ரிடி முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனால் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.