Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 04 அக்டோபர் 2026 | 18 புரட்டாசி பராபவ வருடம்

மீன் வாங்க குவிந்த மக்கள்... அதிகாலையிலேயே களைகட்டிய கடலூர் துறைமுகம்

மீன் வாங்க குவிந்த மக்கள்... அதிகாலையிலேயே களைகட்டிய கடலூர் துறைமுகம்

புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமை வழிபாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மீன் வாங்க திரண்டனர். புரட்டாசி 3-வது சனிக்கிழமை வழிபாடுகளை முன்னிட்டு நேற்று வரை பலர் அசைவ உணவுகளை தவிர்த்து வந்தனர். வழிபாடுகள் நிறைவடைந்த நிலையில், இன்று மீன் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் அதிகாலை முதலே கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், இன்று துறைமுகத்திற்கு அதிகளவில் மீன்கள் வந்திருந்ததால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர். துறைமுகத்தில் வஞ்சரம் மீன் கிலோ ரூ.700 முதல் ரூ.900 வரையிலும், வவ்வால் மீன் ரூ.700-க்கும், இறால் ரூ.250-க்கும், சங்கரா மீன் ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. புரட்டாசி 3-வது சனிக்கிழமை வழிபாடுகள் முடிவடைந்ததையடுத்து மீன் வாங்க பொதுமக்கள் திரண்டதால், கடலூர் மீன்பிடி துறைமுகம் இன்று காலை முதலே பரபரப்புடன் காணப்பட்டது. மீன் வாங்க குவிந்த மக்கள்... அதிகாலையிலேயே களைகட்டிய கடலூர் துறைமுகம் புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமை வழிபாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மீன் வாங்க திரண்டனர்.

Advertisement
புரட்டாசி 3-வது சனிக்கிழமை வழிபாடுகளை முன்னிட்டு நேற்று வரை பலர் அசைவ உணவுகளை தவிர்த்து வந்தனர். வழிபாடுகள் நிறைவடைந்த நிலையில், இன்று மீன் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் அதிகாலை முதலே கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், இன்று துறைமுகத்திற்கு அதிகளவில் மீன்கள் வந்திருந்ததால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர். துறைமுகத்தில் வஞ்சரம் மீன் கிலோ ரூ.700 முதல் ரூ.900 வரையிலும், வவ்வால் மீன் ரூ.700-க்கும், இறால் ரூ.250-க்கும், சங்கரா மீன் ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. புரட்டாசி 3-வது சனிக்கிழமை வழிபாடுகள் முடிவடைந்ததையடுத்து மீன் வாங்க பொதுமக்கள் திரண்டதால், கடலூர் மீன்பிடி துறைமுகம் இன்று காலை முதலே பரபரப்புடன் காணப்பட்டது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு