Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 04 அக்டோபர் 2026 | 18 புரட்டாசி பராபவ வருடம்

ராமர்-சீதை திருக்கல்யாணம்: 7 தேங்காய்கள் ரூ.63 ஆயிரத்துக்கு ஏலம்

ராமர்-சீதை திருக்கல்யாணம்: 7 தேங்காய்கள் ரூ.63 ஆயிரத்துக்கு ஏலம்

இலங்கையில் ராவணனை வென்று சீதையை மீட்ட ராமர், அயோத்திக்குத் திரும்பும் வழியில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 94 கரியமாணிக்கம் கிராமத்தில் ஓய்வெடுக்க தங்கியதாக நம்பப்படுகிறது. இதன் நினைவாக, இக்கிராமத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையன்று சீதை-ராமர் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதையொட்டி ஹோமங்கள் மற்றும் திருமஞ்சனம் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து சீதை-ராமர் திருக்கல்யாணம், மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த விழாவில் இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் சாமிக்கு படைக்கப்பட்ட தேங்காய்களை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டு, பின்னர் சாப்பிட்டால் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், நினைத்த காரியங்கள் நிறைவேறும், அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Advertisement
இதையடுத்து சாமிக்கு படைக்கப்பட்ட 7 தேங்காய்கள் ஏலத்தில் விடப்பட்டன. பக்தர்கள் ஆர்வத்துடன் போட்டிபோட்டு தேங்காய்களை ஏலம் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக முதல் தேங்காய் ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம் போனது. 7 தேங்காய்களும் சேர்த்து மொத்தம் ரூ.63 ஆயிரத்து 501-க்கு ஏலம் எடுக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அமுதா ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் ராமபிரான் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு