Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
ஞாயிறு | 06 செப்டம்பர் 2026 | 21 ஆவணி பராபவ வருடம்

மார்வெல் வரலாற்றிலேயே நீளமான படம் - ‘எண்ட்கேமை’ மிஞ்சிய ‘டூம்ஸ்டே’?

மார்வெல் வரலாற்றிலேயே நீளமான படம் - ‘எண்ட்கேமை’ மிஞ்சிய ‘டூம்ஸ்டே’?

மார்வெல் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் திரைப்படங்களில் ஒன்றான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (MCU) வரலாற்றில் அதிக நேரம் ஓடும் படமாக உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தப் படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ ஆகிய படங்களை இயக்கிய ரஸ்ஸோ சகோதரர்களே ‘டூம்ஸ்டே’ படத்தையும் இயக்கியுள்ளனர்.இந்நிலையில், படத்தின் ரன் டைம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
அதன்படி, ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’சுமார்3மணிநேரம்30நிமிடங்கள்நீளமாகஇருக்கலாம்எனகூறப்படுகிறது.தற்போதுவரை MCU-வில் அதிக ரன் டைம் கொண்ட படமாக 2019-ல் வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ உள்ளது. இந்தப் படம் 3 மணி நேரம் 1 நிமிடம் ஓடியது. ‘டூம்ஸ்டே’ படத்தின் ரன் டைம் குறித்த தகவல் உறுதியானால், ‘எண்ட்கேம்’ படத்தின் சாதனையை முறியடித்து MCU-வின் நீளமான படமாக அது மாறும்.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு