Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
திங்கள் | 07 செப்டம்பர் 2026 | 22 ஆவணி பராபவ வருடம்

மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடக்கம்

மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடக்கம்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தனித்துவமான இயக்குநராக கவனம் பெற்ற மாரி செல்வராஜ், தனது அடுத்த படைப்பாக ‘மஞ்சணத்தி’யை இயக்குகிறார். இது அவரது ஆறாவது படைப்பாக உருவாகிறது.இப்படத்தின் முக்கிய அம்சமாக, முதன்முறையாக மாரி செல்வராஜ் - இளையராஜா கூட்டணி இணைந்துள்ளது. இதனால் படத்தின்மீதானஎதிர்பார்ப்புரசிகர்கள்மத்தியில்அதிகரித்துள்ளது.‘மஞ்சணத்தி’ திரைப்படம், மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்துடன் தொடர்புடைய கதையாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Advertisement
‘வாழை’ படத்தில் இடம்பெற்ற சிவநைந்தன் கதாபாத்திரத்தின் பதின்பருவம் மற்றும் இளமைக்கால வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் கதை நகரக்கூடும் என கூறப்படுகிறது.மாரி செல்வராஜின் சொந்த தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டூடியோஸ் சார்பில் ‘மஞ்சணத்தி’ உருவாகிறது. இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு தேனியில் இன்று தொடங்கியது. மாரி செல்வராஜ் - இளையராஜா இணையும் முதல் படமான இதன் படப்பிடிப்பை இளையராஜா கிளாப் போர்டு அடித்து தொடங்கி வைத்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு