Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 03 அக்டோபர் 2026 | 17 புரட்டாசி பராபவ வருடம்

மராட்டியம்: விபத்தில் 7 பேர் பலி; துர்கா சிலையை எடுத்து வந்தபோது சோகம்

மராட்டியம்: விபத்தில் 7 பேர் பலி; துர்கா சிலையை எடுத்து வந்தபோது சோகம்

மராட்டியத்தில் தசரா பண்டிகைக்காக துர்கா சிலையை வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பியவர்கள் சென்ற டெம்போ வேன் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். வார்தா பகுதியைச் சேர்ந்த சிலர், தங்களது ஊரில் தசரா விழாவையொட்டி துர்கா சிலையை பிரதிஷ்டை செய்ய திட்டமிட்டிருந்தனர். இதற்காக சிலை வாங்குவதற்காக நேற்று முன்தினம் இரவு டெம்போ வேனில் ஷேகான் பகுதிக்குச் சென்றனர். சிலையை பெற்றுக்கொண்ட பின்னர் அதே வேனில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை 12.45 மணியளவில் அமராவதி மாவட்டம் தமன்காவ் ரெயில் நிலையம் அருகே சம்ருத்தி விரைவுச்சாலையின் ‘சேனல் 97’ பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வேகமாக வந்த 16 சக்கரங்கள் கொண்ட சரக்கு லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற வேன் மீது மோதியது.

Advertisement
இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 23 பேர் பலத்த காயமடைந்தனர். தசரா விழாவுக்காக கொண்டு வரப்பட்ட துர்கா சிலையும் விபத்தில் உடைந்து சேதமடைந்தது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. காயமடைந்த 21 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு