Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 03 அக்டோபர் 2026 | 17 புரட்டாசி பராபவ வருடம்

தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக வலியுறுத்தி 10-ந்தேதி போராட்டம்: திப்கே அறிவிப்பு

தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக வலியுறுத்தி 10-ந்தேதி போராட்டம்: திப்கே அறிவிப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (SIR) தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவர் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், விதிமுறைகளுக்கு உட்பட்டே இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாமல் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் செயல்பட்டதாக புகார்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அவர் பதவி விலக வலியுறுத்தி காந்தி ஜெயந்தி தினமான நேற்று மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி மற்றும் சட்டமேதை அம்பேத்கர் ஆகியோரின் படங்களுக்கு மரியாதை செலுத்திய பின்னர், அகிம்சை வழியில் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு அக்கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே தலைமை வகித்தார். போராட்டத்தில் நடிகர் நசிருதீன் ஷா, நடிகை ஷபானா ஆஸ்மி, திரைப்பட இயக்குனர்கள் விஷால் பரத்வாஜ், ஹன்சல் மேத்தா, இசையமைப்பாளர் விஷால் தத்லானி, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Advertisement
போராட்டத்தை முன்னிட்டு தாதர் மற்றும் சேனா பவன் பகுதிகளில் மும்பை போலீசார் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர். தாதர் ரெயில் நிலையத்திலும் நூற்றுக்கணக்கான ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இந்நிலையில், மும்பை போராட்டத்துக்குப் பிறகு அபிஜீத் திப்கே தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், தலைமை தேர்தல் கமிஷனர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், இல்லையெனில் வரும் 10-ந்தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் உள்ள கட்சியினர் டெல்லிக்கு பேரணியாக சென்று போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், போராட்டம் அமைதியான முறையில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தலை விரும்பும் அனைத்து குடிமக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். மும்பையில் போலீசார் அனுமதி அளிக்காத நிலையிலும், கடும் வெயிலையும் தடுப்புகளையும் பொருட்படுத்தாமல் இளம்பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கட்சியின் தலைவர் அஜிங்கியா ஷிண்டே, ஞானேஷ் குமார் பதவி விலகுவதுடன், குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு