மராட்டியம் மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் கனமழை பாதிப்பு: மழை தொடர்பான சம்பவங்களில் 18 பேர் உயிரிழப்பு: தானே மாவட்டத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 18 பேர் பலி
மராட்டிய மாநிலத்தின் தானே மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் தாக்கமாக தானே மாவட்டத்தில் நிலச்சரிவு, சுவர் இடிந்து விழுதல் மற்றும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.இந்த பாதிப்புகளால் 229 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 790 பேர் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த பருவமழை காலத்தில் இதுவரை 17 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த மாதம் முழுவதும் மும்பையுடன் சேர்த்து தானே மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.