சென்னை கிண்டி பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில், மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பெரியபுள்ளானின் மகன் உலகாதிபதி (21) உயிரிழந்தார்.மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உலகாதிபதி, சென்னை தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வேளச்சேரியில் நண்பர்களுடன் தங்கி வந்த அவர், சம்பவம் நடைபெற்ற நாளின் காலை இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார்.கிண்டி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், முன்னால் சென்ற வாகனங்கள் நின்றன. அதன்படி உலகாதிபதியும் தனது பைக்கை நிறுத்தியிருந்தார்.
Advertisement
அந்த நேரத்தில் பின்னால் வந்த பொக்லைன் எந்திரம் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இந்த மோதலால் உலகாதிபதி கீழே விழுந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த பொக்லைன் எந்திரம் அவர் மீது ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் உலகாதிபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.உலகாதிபதி, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பெரியபுள்ளானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.