தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று பதிலுரை வழங்கி வருகிறார்.கடந்த 18 நாட்களாக நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில், கடந்த 3-ந்தேதி நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் முக்கியத்துவம் பெற்றது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்று பேசியதால் அவையில் பரபரப்பான சூழல் நிலவியது.விவாதத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், த.வெ.க. அரசு பொறுப்பேற்ற 116 நாட்களில் தமிழ்நாடு பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பதாக விமர்சித்தார். அரசின் பல்வேறு அறிவிப்புகளை சுட்டிக்காட்டிய அவர், கடந்த 116 நாட்களில் சுமார் 550 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், அவற்றில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள் மற்றும் 10 ஆணவக் கொலைகள் அடங்குவதாகவும் தெரிவித்தார். மேலும், தங்களது கேள்விகளுக்கு முதல்அமைச்சர்நேரடியாகபதிலளிக்கவேண்டும்என்றும்வலியுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, த.வெ.க. ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.அப்போது இடையில் எழுந்து பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், உறுப்பினர்கள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை தெளிவான விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார்.
Advertisement
தான் அவையில் இல்லாவிட்டாலும் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் குறித்த தகவல்கள் தமக்கு வந்து சேரும் என்றும், அனைத்துக்கும் பதில் அளிப்பதாகவும் அவர் கூறினார். மேலும், பதிலுரை வழங்கும்போது தி.மு.க. உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேறக் கூடாது என்ற உத்தரவாதத்தையும் கேட்டார். இதையடுத்து அவர் சட்டசபையில் இருந்து வெளியேறினார்.இந்நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளிக்க முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் எழுந்தார். த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கரவொலி எழுப்பிய நிலையில் அவர் தனது பதிலுரையை தொடங்கினார்.அப்போது பேசிய முதல்-அமைச்சர், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் காவல்துறை முக்கிய அடித்தளமாக விளங்குவதாக தெரிவித்தார். ஒரு மாநிலத்தின் அமைதியான சூழலில்தான் அதன் முன்னேற்றம் சாத்தியமாகும் என்றும், சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் தொழில் முதலீடுகள் வருவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறினார்.மேலும், சட்டத்தை மதிக்காதவர்களுக்கு காவல்துறை எதிரியாக இருக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.