Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 07 நவம்பர் 2026 | 21 ஐப்பசி பராபவ வருடம்

படகிலிருந்து தவறி கடலில் விழுந்த தூத்துக்குடி மீனவர்: தீவிரமாக நடைபெறும் தேடுதல் பணி

படகிலிருந்து தவறி கடலில் விழுந்த தூத்துக்குடி மீனவர்: தீவிரமாக நடைபெறும் தேடுதல் பணி

தூத்துக்குடி மாவட்டம் மட்டக்கடை பகுதியைச் சேர்ந்தவர் தம்பிராஜ். இவர் சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்று மீன்பிடித்துவிட்டு நேற்று இரவு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கரையிலிருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் படகு வந்து கொண்டிருந்தபோது, திடீரென பலத்த காற்று வீசியதுடன் கடலும் கடுமையாக கொந்தளித்தது. இதில் நிலைதடுமாறிய தம்பிராஜ், எதிர்பாராதவிதமாக படகிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்தார்.

Advertisement
இதனால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், உடனடியாக அவரைக் கடலில் தேடத் தொடங்கினர். இருப்பினும், நீண்ட நேரம் தேடியும் தம்பிராஜைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, காணாமல் போன மீனவரைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. தம்பிராஜை விரைவாக மீட்க மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு