பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சாஹிப்சாதா பர்ஹான் நியமனம்
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் பாகிஸ்தான் அணிக்கு சாஹிப்சாதா பர்ஹான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சல்மான் அலி ஆகாவுக்கு பதிலாக டி20 அணியின் கேப்டன் பொறுப்பை பர்ஹான் ஏற்றுள்ளார். சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை பர்ஹான் வழிநடத்தினார். அந்தத் தொடரில் பாகிஸ்தான் வெள்ளிப் பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. பாகிஸ்தான்–இலங்கை அணிகள் மோதும் 3 டி20 போட்டிகளும் ராவல்பிண்டியில் நடைபெற உள்ளன.