பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சாஹிப்சாதா பர்ஹான் நியமனம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
07 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 07 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சாஹிப்சாதா பர்ஹான் நியமனம்

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சாஹிப்சாதா பர்ஹான் நியமனம்

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் பாகிஸ்தான் அணிக்கு சாஹிப்சாதா பர்ஹான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சல்மான் அலி ஆகாவுக்கு பதிலாக டி20 அணியின் கேப்டன் பொறுப்பை பர்ஹான் ஏற்றுள்ளார். சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை பர்ஹான் வழிநடத்தினார். அந்தத் தொடரில் பாகிஸ்தான் வெள்ளிப் பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. பாகிஸ்தான்–இலங்கை அணிகள் மோதும் 3 டி20 போட்டிகளும் ராவல்பிண்டியில் நடைபெற உள்ளன. இதையடுத்து பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் ஒருநாள் முத்தரப்பு தொடர் நடைபெறுகிறது. இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் ஷாஹீன் ஷா அப்ரிடி இடம்பெறவில்லை. பாகிஸ்தான் டி20 அணி: சாஹிப்சாதா பர்ஹான் (கேப்டன்), அப்துல் சமத், அப்ரார் அகமது, அரபத் மின்ஹாஸ், பகர் ஜமான், ஹசன் நவாஸ், முகமது இம்ரான் ரந்தாவா, கவாஜா நபே, மாஸ் சாதகத், நசீம் ஷா, ரசாவுல்லா, சைம் அயூப், முகமது சல்மான் மிர்சா, ஷதாப் கான், சுபியான் மொகீம்.