Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 06 அக்டோபர் 2026 | 20 புரட்டாசி பராபவ வருடம்

மீண்டும் தொடங்கிய ஹர்திக் பாண்டியா டிரேட் பேச்சுவார்த்தை... 3 அணிகள் ஆர்வம் - என்ன செய்யப்போகிறது மும்பை?

மீண்டும் தொடங்கிய ஹர்திக் பாண்டியா டிரேட் பேச்சுவார்த்தை... 3 அணிகள் ஆர்வம் - என்ன செய்யப்போகிறது மும்பை?

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள ஹர்திக் பாண்டியாவை டிரேட் முறையில் பெறுவதற்கு 3 அணிகள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அணிகளுக்கும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், டிரேட் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்ப நிலையில்தான் இருப்பதாகத் தெரிகிறது. அதேவேளையில், ஒரு அணி ஹர்திக் பாண்டியாவை அணியில் சேர்ப்பதில் தீவிரமாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல், டிரேட் விவகாரத்தை மீண்டும் முக்கியத்துவம் பெறச் செய்துள்ளது.

ஐ.பி.எல். வீரர்கள் தக்கவைப்பு காலக்கெடு நெருங்கி வரும் சூழலில், ஹர்திக் பாண்டியா தொடர்பான முடிவை எடுக்க அடுத்த 3 முதல் 4 வாரங்கள் முக்கியமான காலகட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தக்கவைப்பு பட்டியலை இறுதி செய்வதற்கு முன், ஹர்திக்கை தொடர்ந்து அணியில் வைத்திருப்பதா அல்லது டிரேட் செய்வதா என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் பல்வேறு வாய்ப்புகளை ஆராயக்கூடும் எனத் தெரிகிறது.

கடந்த காலத்தில் ஹர்திக்கை டிரேட் செய்வதில் மற்ற அணிகளுக்கு அதிக ஆர்வம் இல்லை என்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பல அணிகள் அவரை பெற முன்வந்துள்ளதாக கூறப்படுவது இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

Advertisement

ஹர்திக் பாண்டியாவை வாங்க அணிகள் ஆர்வம் காட்டுவதற்கு அவரது முந்தைய ஐ.பி.எல். செயல்பாடுகளும் முக்கிய காரணமாக கருதப்படுகின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டபோது, அந்த அணியின் முதல் சீசனிலேயே ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். தொடர்ந்து அடுத்த சீசனிலும் குஜராத் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.

அதேநேரத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை.

இதனால், ஹர்திக்கை டிரேட் செய்ய விரும்பும் அணிகளுக்கு அவரது உடல்தகுதி முக்கியமான பரிசீலனையாக இருக்கும். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் தொடர்ந்து பங்களிக்க வேண்டியிருப்பதால், அவர் முழுமையான ஆல்ரவுண்டராக செயல்படும் திறன் மற்றும் உடல்தகுதி ஆகியவை டிரேட் முடிவில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியுடனேயே தொடர்கிறாரா அல்லது வேறு அணிக்கு டிரேட் செய்யப்படுகிறாரா என்பது அடுத்த சில வாரங்களில் தெளிவாகும்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு