மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பகத் பாசில், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளார். குறிப்பாக, ‘புஷ்பா’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்றார்.இந்நிலையில், இயக்குநர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படத்தில் பகத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷஷாங்க் யெலெட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.மாயாஜாலம் மற்றும் பேன்டசி அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பகத் பாசில், மேஜிக் கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
குழந்தை நட்சத்திரமான சாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பகத் பாசில் மற்றும் சாரா ஆகியோரின் சுவாரஸ்யமான பயணத்தை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.மேலும், பாலிவுட் நடிகர் சவுரப் சக்தேவாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘புஷ்பா’ திரைப்படத்தில் பகத் பாசிலுடன் இணைந்து நடித்திருந்தார். படத்திற்கு கால பைரவா இசையமைத்துள்ளார்.தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. முதலில் செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.