பகத் பாசிலின் “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
01 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 01 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பகத் பாசிலின் “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

பகத் பாசிலின் “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பகத் பாசில், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளார். குறிப்பாக, ‘புஷ்பா’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்றார்.இந்நிலையில், இயக்குநர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படத்தில் பகத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷஷாங்க் யெலெட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.மாயாஜாலம் மற்றும் பேன்டசி அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பகத் பாசில், மேஜிக் கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை நட்சத்திரமான சாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பகத் பாசில் மற்றும் சாரா ஆகியோரின் சுவாரஸ்யமான பயணத்தை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.மேலும், பாலிவுட் நடிகர் சவுரப் சக்தேவாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘புஷ்பா’ திரைப்படத்தில் பகத் பாசிலுடன் இணைந்து நடித்திருந்தார். படத்திற்கு கால பைரவா இசையமைத்துள்ளார்.தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. முதலில் செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.