திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் பெட்ரோல் பங்க் மேலாளரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த கணேஷ் சந்திரன் (57), கங்கைகொண்டான் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் பணியாற்றும் பெட்ரோல் பங்கில் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.
Advertisement
ஆனால், ஒரு வாரத்திற்குள் அந்த பெண் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கணேஷ் சந்திரன் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கங்கைகொண்டான் போலீசார், கணேஷ் சந்திரனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.