Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 16 செப்டம்பர் 2026 | 31 ஆவணி பராபவ வருடம்

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், பக்தர்களின் பயண வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இன்று (புதன்கிழமை) மாலை முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தாம்பரத்தில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு மெமு ரெயில், மறுநாள் அதிகாலை 2.20 மணிக்கு மதுரையை சென்றடையும்.

Advertisement
இதன் மறுமார்க்க சேவை நாளை (17-ந்தேதி) மதியம் 2 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, இரவு 9.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். 12 பெட்டிகள் கொண்ட இந்த சிறப்பு மெமு ரெயில், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு