Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்ற ஸ்ரீசங்கர்... ஆக்கி அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்

நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்ற ஸ்ரீசங்கர்... ஆக்கி அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்

ஜப்பானின் அய்ச்சி மாகாணம் நகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீசங்கர் முரளி 8.07 மீட்டர் தூரம் கடந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்தப் போட்டியில் சீனாவின் ஜு யுஹாவ் 8.17 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். உஸ்பெகிஸ்தானின் அன்வர் அன்வரோவ் 8.07 மீட்டர் தூரத்துடன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். இதனிடையே, ஆண்களுக்கான ஆக்கி போட்டியின் இறுதி லீக் ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை 10-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

Advertisement
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் சிறப்பாக விளையாடி 4 கோல்கள் அடித்தார். ஷிலானந்த் 2 கோல்களையும், அபிஷேக், சுக்ஜீத் சிங், ஜுக்ராஜ் சிங், மந்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோலையும் பதிவு செய்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு