Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தின் பின்னணியில், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதற்கிடையில், நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுத்தேர்வுகள் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Advertisement
இந்த மசோதா சட்டமாக அமலுக்கு வந்தால், தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு தற்போது இருப்பதை விட கடுமையான தண்டனைகளும் அதிக அபராதமும் விதிக்கப்படும்.இந்த சூழலில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். “Ban NEET” என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை ஏந்திய அவர்கள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு