Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 28 ஆகஸ்ட் 2026 | 12 ஆவணி பராபவ வருடம்

நாகார்ஜுனாவின் 100-வது படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் நாளை வெளியீடு

நாகார்ஜுனாவின் 100-வது படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் நாளை வெளியீடு
நடிகர் நாகார்ஜுனா தனது திரைப்பயணத்தில் 100-வது படத்தை நெருங்கியுள்ளார். அவரது பிறந்தநாளான ஆகஸ்ட் 29-ம் தேதியை முன்னிட்டு, இந்தப் படத்தின் தலைப்பு கிளிம்ப்ஸ் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த முன்னணி நட்சத்திரங்களின் வரிசையில் நாகார்ஜுனாவும் இணைய உள்ளார். தென்னிந்திய திரையுலகில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.நாகார்ஜுனா 1986-ம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்தப் படம் இந்தியில் வெளியான ‘ஹீரோ’ திரைப்படத்தின் ரீமேக் ஆகும். தொடக்கத்தில் விமர்சனங்களை எதிர்கொண்ட அவர், பின்னர் தனது தனித்துவமான நடிப்பால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். மேலும், தெலுங்கு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியையும் பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார்.அவரது 100-வது படத்தை தமிழ் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்குகிறார். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்போது ‘கிங் 100’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. ‘நித்தம் ஒரு வானம்’, ‘ஆகாசம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரா.
Advertisement
கார்த்திக்.இந்தப் படத்தில் நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 25 வயது முதல் 60 வயது வரையிலான பல்வேறு வயது தோற்றங்களில் அவர் நடிக்க இருப்பதாகவும், இதற்காக டி-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தில் மூன்று கதாநாயகிகள் இடம்பெற உள்ளதாகவும், அவர்களில் ஒருவராக சுஷ்மிதா பட் இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையே, நடிகை தபு இப்படத்தில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு நாகார்ஜுனா - தபு கூட்டணி மீண்டும் இணைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதிலும் தபு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது படத்தின் மீதான கவனத்தை மேலும் கூட்டியுள்ளது. இந்நிலையில், நாகார்ஜுனாவின் 100-வது படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ், அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு