Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 12 அக்டோபர் 2026 | 26 புரட்டாசி பராபவ வருடம்

நேபாளம்-திபெத் பயங்கர வெள்ளம்: ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் உருக்கம்

நேபாளம்-திபெத் பயங்கர வெள்ளம்: ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் உருக்கம்

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் சேறு, பாறைகளுடன் கூடிய வெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. கிராமங்கள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.இந்த இயற்கைப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமீபத்திய தகவலின்படி, நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் 390-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 1,500 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் பணியும், மீட்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.வெள்ளப்பெருக்கால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும், கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்தியர்களும் பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிலையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவு குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப் பதிவில் கவலை தெரிவித்துள்ளார்.

Advertisement
நேபாளத்தில் இருந்து வெளியாகும் காட்சிகள் அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள அவர், அங்குள்ள அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.இதேபோல், நடிகை கீர்த்தி சுரேஷும் வெள்ளப் பேரழிவு குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இயற்கை இனியாவது கருணை காட்ட வேண்டும் என்றும், இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளதால் சில இடங்களுக்கு மீட்புக் குழுவினர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு