நடிகை ஸ்ருதி ஹாசன் உயர் நீதிமன்றத்தில் ரூ.15 கோடி இழப்பீடு கோரி வழக்கு
நடிகை ஸ்ருதி ஹாசன், தனது பெயர், படம், குரல், உருவம் மற்றும் ஆளுமை உரிமைகள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதாகக் கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது மனுவில், AI மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் தனது முகத்தை பயன்படுத்தி ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுவதாகவும், தனது அனுமதியின்றி பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதுடன் போலி விளம்பரங்களும் வெளியிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால், தனது அடையாளத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியவர்களிடம் இருந்து ரூ.15 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடவும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களுக்கு தடை விதிக்கவும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீப காலமாக AI மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பல நடிகைகள் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.