Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 16 செப்டம்பர் 2026 | 31 ஆவணி பராபவ வருடம்

தெற்கு ரெயில்வே புதிய பொது மேலாளராக சுப்பா ராவ் பொறுப்பேற்றார்

தெற்கு ரெயில்வே புதிய பொது மேலாளராக சுப்பா ராவ் பொறுப்பேற்றார்

தெற்கு ரெயில்வேயின் புதிய பொது மேலாளராக சுப்பா ராவ் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.இதற்கு முன்பு இந்த பதவியில் ஆர்.என். சிங் பணியாற்றி வந்தார். அவரது பதவிக்காலம் ஜூலை 31, 2026 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அதன்பின் சுப்பா ராவ் புதிய பொது மேலாளராக நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.1987ஆம் ஆண்டு இந்திய ரெயில்வே சேவையில் தனது பணியைத் தொடங்கிய சுப்பா ராவ், உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வகித்த அனுபவம் பெற்றவர்.

Advertisement
தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பொறுப்பை ஏற்கும் முன்பு, சென்னை ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையின் (ICF) பொது மேலாளராக பணியாற்றினார்.அதற்கு முன்னதாக ஹப்பள்ளி, சேலம், செகந்திராபாத், மைசூரு மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ரெயில்வேயின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றுள்ள அவர், பெங்களூரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் பொது கொள்கை மற்றும் மேலாண்மை தொடர்பான பட்டமேற்படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு