Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 11 செப்டம்பர் 2026 | 26 ஆவணி பராபவ வருடம்

தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் தென்னை மரங்களில் அதிகரித்து வரும் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் காணப்படுகிறது. இவ்வகை வெள்ளை ஈக்கள் தென்னை ஓலைகளில் சுருள் வடிவில் சுமார் 50 முதல் 65 முட்டைகள் வரை இடுகின்றன. 4 முதல் 7 நாட்களில் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்து, ஓலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சத் தொடங்குகின்றன. பின்னர் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்கள் பறந்து அருகிலுள்ள தென்னை மரங்கள் மற்றும் தோப்புகளுக்கும் பரவுகின்றன. வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிகள் * ஏக்கருக்கு 2 விளக்குப் பொறிகள் அமைத்து, இரவு 7 மணி முதல் 11 மணி வரை அவற்றை எரியவிடுவதன் மூலம் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். * ஏக்கருக்கு 10 மஞ்சள் ஒட்டுப் பொறிகளை தரையில் இருந்து 5 அடி உயரத்தில் கட்டி வைக்கலாம். அல்லது தென்னை மரத்தின் தண்டுப் பகுதியில் சுற்றிலும் அவற்றை பொருத்தலாம். * பாதிக்கப்பட்ட மரங்களின் ஓலைகளில் அதிக அழுத்தத்துடன் தண்ணீரை விசைத் தெளிப்பான் மூலம் பீய்ச்சி அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் அவற்றின் முட்டைகளை அழிக்க முடியும்.

Advertisement
உயிரியல் முறையில் கட்டுப்படுத்தலாம் உயிரியல் முறையைப் பயன்படுத்த விரும்புவோர், ஏக்கருக்கு 500 கிரைசோபெர்லா ஒட்டுண்ணிகளை தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் கட்டி வைக்கலாம். இவை வெள்ளை ஈக்களின் புழுக்களை உண்டு அழிக்கும். மேலும், காக்ஸினெல் லிட் பொறிவண்டு மற்றும் என்கார்சியா ஒட்டுண்ணிகளை தென்னை ஓலைகளில் வைப்பதன் மூலமும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். வேப்பெண்ணெய் தெளிப்பு தெளிப்பு முறையை மேற்கொள்ளும் நிலையில், ஒரு லிட்டர் தண்ணீரில் 30 மி.லி. வேப்பெண்ணெய் அல்லது 2 மி.லி. அசாடிராக்டின்** கலந்து, அதனுடன் 1 மி.லி. ஒட்டுத் திரவத்தையும் சேர்த்து, தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் தெளிக்கலாம். வெள்ளை ஈ தாக்குதல் உள்ள தென்னைத் தோப்புகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தாமல் இருந்தால், இயற்கை எதிரிகள் அதிகரித்து வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையை இயற்கையாகவே கட்டுப்படுத்த உதவும். கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மழை இல்லாததால், தற்போது தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு