Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 15 செப்டம்பர் 2026 | 30 ஆவணி பராபவ வருடம்

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை பலி

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை பலி

தூத்துக்குடியில் பாட்டி வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்த 11 மாத ஆண் குழந்தை, அருகில் இயங்கிக் கொண்டிருந்த நீரேற்றும் மின் மோட்டாரை எதிர்பாராதவிதமாகத் தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குமால் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் - பாஸ்டினா தம்பதியின் 11 மாத ஆண் குழந்தை மகிழன். குழந்தையை அழைத்துக் கொண்டு பாஸ்டினா, திரேஸ்புரம் தீர்த்தக்கரை பிள்ளையார் கோவில் அருகே உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டின் முன்புறத்தில் மகிழன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகில் செயல்பட்டு கொண்டிருந்த நீரேற்றும் மின் மோட்டாரை எதிர்பாராதவிதமாகத் தொட்டதாக கூறப்படுகிறது.

Advertisement
இதில் மின்சாரம் தாக்கியதில் குழந்தை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக ஓடி வந்து மகிழனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 11 மாத குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு