Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 08 அக்டோபர் 2026 | 22 புரட்டாசி பராபவ வருடம்

திருவாரூரில் 10-க்கும் மேற்பட்டோரை கடித்த தெருநாய்கள்... பொதுமக்கள் பீதி!

திருவாரூரில் 10-க்கும் மேற்பட்டோரை கடித்த தெருநாய்கள்... பொதுமக்கள் பீதி!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை வெறிநாய்கள் அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலைகளில் சென்ற பொதுமக்களை நாய்கள் துரத்தி கடித்ததில் சிறுவர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முத்துப்பேட்டை பேரூராட்சியின் முக்கிய பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் சில தெருநாய்கள் ஆக்ரோஷமாக சுற்றித் திரிந்துள்ளன. நடைபயிற்சி சென்றவர்கள் மட்டுமின்றி சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களையும் நாய்கள் திடீரென விரட்டிச் சென்று கடித்ததாக கூறப்படுகிறது. நாய்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அங்கும் இங்குமாக ஓடியுள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Advertisement
அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே நாளில் அடுத்தடுத்து பலர் நாய் கடிக்கு உள்ளானதால் முத்துப்பேட்டை பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே தயக்கம் காட்டி வருகின்றனர். முத்துப்பேட்டை பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடிக்க பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு