Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 27 அக்டோபர் 2026 | 10 ஐப்பசி பராபவ வருடம்

திருப்பத்தூரில் பெற்ற மகனையே போலீசில் ஒப்படைத்த பெற்றோர்... என்ன காரணம்

திருப்பத்தூரில் பெற்ற மகனையே போலீசில் ஒப்படைத்த பெற்றோர்... என்ன காரணம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில், தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்த மகனை, அவரது பெற்றோரே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்ற இளைஞர், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. போதையில் இருந்தபோது, தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். மகனின் இந்த நடவடிக்கையால் மனவேதனை அடைந்த பெற்றோர், அவரை பலமுறை கண்டித்ததுடன், அறிவுரைகளும் வழங்கியுள்ளனர். இருப்பினும், பிரசாத் தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து வீட்டில் பிரச்சினை ஏற்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement
இதனால் பொறுமையிழந்த பெற்றோர், வேறு வழியின்றி அதிரடி முடிவை எடுத்துள்ளனர். வீட்டில் தகராறு செய்த பிரசாத்தை அழைத்துக்கொண்டு நாட்டறம்பள்ளி காவல் நிலையத்திற்குச் சென்ற அவர்கள், தினமும் மது அருந்திவிட்டு வந்து தங்களை நிம்மதியாக வாழவிடாமல் தொந்தரவு செய்வதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், அவரை தங்களால் இனியும் சமாளிக்க முடியவில்லை என்றும் கூறி ஒப்படைத்துள்ளனர். பெற்ற மகனையே பெற்றோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் பிரசாத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு