திருப்பத்தூரில் பெற்ற மகனையே போலீசில் ஒப்படைத்த பெற்றோர்... என்ன காரணம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
27 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 27 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருப்பத்தூரில் பெற்ற மகனையே போலீசில் ஒப்படைத்த பெற்றோர்... என்ன காரணம்

திருப்பத்தூரில் பெற்ற மகனையே போலீசில் ஒப்படைத்த பெற்றோர்... என்ன காரணம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில், தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்த மகனை, அவரது பெற்றோரே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்ற இளைஞர், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. போதையில் இருந்தபோது, தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். மகனின் இந்த நடவடிக்கையால் மனவேதனை அடைந்த பெற்றோர், அவரை பலமுறை கண்டித்ததுடன், அறிவுரைகளும் வழங்கியுள்ளனர். இருப்பினும், பிரசாத் தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து வீட்டில் பிரச்சினை ஏற்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பொறுமையிழந்த பெற்றோர், வேறு வழியின்றி அதிரடி முடிவை எடுத்துள்ளனர். வீட்டில் தகராறு செய்த பிரசாத்தை அழைத்துக்கொண்டு நாட்டறம்பள்ளி காவல் நிலையத்திற்குச் சென்ற அவர்கள், தினமும் மது அருந்திவிட்டு வந்து தங்களை நிம்மதியாக வாழவிடாமல் தொந்தரவு செய்வதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், அவரை தங்களால் இனியும் சமாளிக்க முடியவில்லை என்றும் கூறி ஒப்படைத்துள்ளனர். பெற்ற மகனையே பெற்றோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் பிரசாத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.