Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

திருச்சி கோவில்களில் செல்போன் பாதுகாக்க கட்டணம் வசூலிக்கும் முறை ரத்து

திருச்சி கோவில்களில் செல்போன் பாதுகாக்க கட்டணம் வசூலிக்கும் முறை ரத்து

தமிழகத்தில் உள்ள 52 கோவில்களில், பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. திருச்சியில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் என 5 முக்கிய கோவில்களில் இந்த செல்போன் பாதுகாப்பு வசதி செயல்பட்டு வந்தது. செல்போன் பாதுகாப்புக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டது.

Advertisement
மேலும், சில கோவில்களில் டோக்கன் வழங்கும் இடங்களில் சில்லரை பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது வாக்குவாதங்களும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருச்சியில் உள்ள இந்த 5 முக்கிய கோவில்களிலும் செல்போன் பாதுகாப்புக்காக ரூ.5 கட்டணம் வசூலிக்கும் முறை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பு அறையில் உள்ள லாக்கரில் வைத்து, அதற்கான டோக்கனை மட்டும் பெற்றுக்கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு