திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம்
திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கு முன் கட்டாயமாக பேரவைத் தலைவரின் அனுமதி பெற வேண்டும் என்ற விதி எதுவும் இல்லை. ஆனால், சட்டப்பேரவை விதி எண் 291-ன் படி, பேரவைத் தலைவரின் முன் அனுமதியின்றி சட்டப்பேரவையின் அமைப்பு எல்லைக்குள் யாரையும் கைது செய்யக் கூடாது. அதேபோல், உரிமையியல் அல்லது குற்றவியல் நீதிமன்றங்களின் உத்தரவு, சம்மன் அல்லது பிற அறிவிப்புகளையும் அந்த எல்லைக்குள் வழங்க அனுமதி இல்லை என்று அவர் தெரிவித்தார்.மேலும், "பேரவையின் அமைப்பு எல்லை" என்றால் என்ன என்பது உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெளிவாக இருக்க வேண்டும் என்றார். அதன்படி, பேரவை மண்டபம், அதன் புறக்கூடங்கள், அதனைச் சார்ந்த அலுவலகங்கள், அமைச்சர்களின் அறைகள், நூலகம், சிற்றுண்டிச்சாலை, தலைமைச் செயலகத்தில் உள்ள குழுக் கூட்ட அறைகள், அண்ணா சாலையில் உள்ள அரசினர் தோட்ட உறுப்பினர் குடியிருப்பின் குழுக் கூட்ட அறைகள், நூலகம் மற்றும் பேரவைத் தலைவர் அவ்வப்போது அறிவிக்கும் பிற இடங்கள் அனைத்தும் அந்த எல்லைக்குள் அடங்கும் என்று விளக்கினார்.இந்த எல்லைக்கு வெளியே நடைபெறும் சம்பவங்களில் சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய பேரவைத் தலைவரின் அனுமதி தேவையில்லை என்றும் அவர் கூறினார்.