Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

திமுகவை இப்போதும் நேசிக்கிறோம்; அமைச்சர் வன்னி அரசு பரபரப்பு பேச்சு

திமுகவை இப்போதும் நேசிக்கிறோம்; அமைச்சர் வன்னி அரசு பரபரப்பு பேச்சு

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வன்னி அரசு, குழந்தைகள் தினக் கொண்டாட்டம், செஞ்சி சிறுமி மாயமான வழக்கின் விசாரணை, தமிழக அரசின் செயல்பாடு மற்றும் திமுகவுடனான உறவு குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், முதலமைச்சர் விஜய் உத்தரவின்பேரில் கேக் வழங்கப்பட்டதாகக் கூறினார். குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட வாழ்த்து அட்டையில் முதலமைச்சர் என்ற அடிப்படையில்தான் விஜயின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது என்றும், இதில் எந்தத் தவறும் இல்லை என்றும் தெரிவித்தார். அனைத்து அரசுகளும் முதலமைச்சரின் புகைப்படத்தையே பயன்படுத்துவது வழக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். செஞ்சி பகுதியில் சிறுமி மாயமான சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறிய வன்னி அரசு, இந்த வழக்கில் எவ்விதத் தொய்வும் ஏற்படவில்லை என்றும், காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Advertisement
மேலும், தவெக அரசு தனது ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தையும் முழுமையாக நிறைவு செய்யும் என்றும், ஆட்சியில் எந்தவிதமான குழப்பமோ, குளறுபடியோ இல்லை என்றும் கூறினார். ஐந்து ஆண்டுகளும் நல்லாட்சியாகத் தொடரும் என நம்பிக்கை தெரிவித்த அவர், சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் எழும்போது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், காவல்துறை அலட்சியமாகச் செயல்படவில்லை என்றும் விளக்கமளித்தார். எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு தவறான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் விமர்சித்தார். திமுகவுடனான உறவு குறித்துப் பேசிய அவர், தானும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் திமுகவை தற்போதும் நேசிப்பதாகத் தெரிவித்தார். திமுகவினரின் கருத்துகளுக்குப் பதிலளிப்பது அவர்களைத் தாழ்வாகக் கருதுவதற்காக அல்ல என்றும் தெளிவுபடுத்தினார். தங்கள் மீது திமுக வன்மத்துடன் செயல்படுகிறது என்பதற்கு, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உரிமைத் திட்டம் தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையே சான்று என்றும் அமைச்சர் வன்னி அரசு கூறினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு