Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 04 அக்டோபர் 2026 | 18 புரட்டாசி பராபவ வருடம்

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்காத ஆத்திரம்... செவிலியர் மீது தாக்குதல்

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்காத ஆத்திரம்... செவிலியர் மீது தாக்குதல்

கும்பகோணம் அருகே குழந்தைக்கு அரசு சார்பிலான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் மோதிரம் வழங்கப்படவில்லை எனக் கூறி, கிராம சுகாதார செவிலியர் உள்ளிட்ட 3 பேரை இளைஞர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் முழையூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த மதனின் மனைவி வனிதாவுக்கு அரசு மருத்துவமனையில் 2-வது குழந்தை பிறந்துள்ளது. பம்பப்படையூரைச் சேர்ந்த அலமேலு, பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், மதனின் குழந்தைக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவில்லை என தெரிகிறது.

Advertisement
இதனால் ஆத்திரமடைந்த மதன், செவிலியர் அலமேலுவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மதன் மண்வெட்டியால் அலமேலு மற்றும் அவரது உறவினர்கள் இருவர் என மொத்தம் 3 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பட்டீஸ்வரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு