தாம்பரத்தில் சம்பள உயர்வு கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!
சென்னை தாம்பரம் மாநகராட்சி மண்டல அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் இன்று (சனிக்கிழமை) திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது வாழ்வாதாரம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி, அலுவலகத்தின் முன்பு அமர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தற்போது தங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.350 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர். இந்தத் தொகையை ரூ.500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.மேலும், முறையான வார விடுமுறை வழங்கப்படுவதில்லை என்றும், விடுப்பு பெறுவதிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் கூறினர்.தங்களது கோரிக்கைகள் நியாயமானவை என்பதால், மாநகராட்சி நிர்வாகம் அவற்றை உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் வலியுறுத்தினர்.